/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் பொங்கல் பானை விற்பனை ஜோர்
/
சிங்கம்புணரியில் பொங்கல் பானை விற்பனை ஜோர்
ADDED : ஜன 11, 2024 04:07 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மண்ணால் செய்யப்பட்ட பொங்கல் பானை விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
இப்பேரூராட்சியில் வடக்கு வேளார் தெருவில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பொங்கல் சீசன் துவங்கியுள்ள நிலையில் ஏராளமான பொங்கல் பானைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர்.
குலதெய்வ கோயில், மஞ்சுவிரட்டு தொழுவம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் பழமையானமுறையில் மண்பானையிலேயே பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளதால் அதை வாங்க வருபவர்கள் அதிகம்.
ஏ.சேவுகப்பெருமாள், சிங்கம்புணரி: இப்பகுதியில் பரம்பரையாக பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபடுகிறோம். தை மாதத்தில் பொங்கல் பானை, ஆடியில் அக்னி சட்டி, கார்த்திகையில் விளக்கு சிட்டி, சித்திரை, வைகாசி, புரட்டாசியில் கோவில்களுக்கு சிறப்பு பூஜைக்கான மண் சிலைகள் மண் குதிரைகள் செய்து வழங்குகிறோம்.
தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டுபொங்கல் பானை தயாரிப்பு நடைபெற்று வருகிறது. பலரும் வாங்கி செல்கின்றனர்.

