/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் பொங்கல் பானைகள் தயார்
/
மானாமதுரையில் பொங்கல் பானைகள் தயார்
ADDED : டிச 23, 2024 05:06 AM

மானாமதுரை: மானாமதுரையில் பொங்கல் பண்டிகைக்காக பாரம்பரியமிக்க மண் பொங்கல் பானைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இங்கு 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் வரவுள்ள பொங்கல் பண்டிகைக்காக தற்போது பொங்கல் பானைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று வீடுகள் தோறும் பாரம்பரிய முறைப்படி புத்தரிசியை கொண்டு மண் பானைகளில் பொங்கல் வைத்து இயற்கையை வழிபடுவது வழக்கம்.
அதற்காக மானாமதுரையில் கலைநயமிக்க உறுதியான மண் பானைகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிற நிலையில் விற்பனையும் சூடு பிடித்துள்ள நிலையில் பானைகள் கால் படி முதல் ஒரு படி வரை அளவுள்ள தயாரிக்கப் பட்டு வருகின்றன.
இது குறித்து மதுரை வியாபாரி கணபதி கூறியதாவது, மானாமதுரை மண்பாண்டம் பொருள்களுக்கென்று ஒரு தனி மவுசு உள்ளது.
அதற்காகவே வருடந்தோறும் சீகனுக்கேற்ப இங்கு வந்து மண்பாண்ட பொருட்களை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகிறேன்.
பொங்கல் பண்டிகைக்காக சிறிய பானையில் இருந்து பெரிய பானை வரை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளேன், இங்கு வாங்கப்படும் மண்பாண்ட பொருட்கள் தரமாகவும், மலிவாகவும் இருப்பதால் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர் என்றார்.