/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
/
கீழடி அருங்காட்சியகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு
ADDED : ஜன 14, 2025 10:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி:
கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். கீழடியில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்த 2023 மார்ச் 5ம் தேதி திறக்கப்பட்டது.
தினமும் 2,000 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதில் தொல்லியல் துறை கமிஷனர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.