ADDED : அக் 12, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை கோவில்களில் நவராத்திரி ஒன்பதாம் நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பூஜையை முன்னிட்டு கோவில் வளாகத்தில் சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஏராளமான மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து வழிபட்டனர்.
தேவகோட்டை நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில், கோதண்டராமர் ஸ்வாமி கோவில், ரங்கநாத பெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில், அபிராமி அம்மன் கோவில், சவு பாக்ய துர்கையம்மன் கோவில், மற்றும் கோவில்களில் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.
கோவில்களில் சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டன. கள்ளிக்குடி சரஸ்வதி கோவிலில் சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டன. பூத்தட்டு எடுத்து வந்து பூச்சொரிதல் செய்தனர்.

