/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.5.19 கோடியில் தோழி மகளிர் விடுதி கட்டுமான பணிக்கு பூஜை
/
ரூ.5.19 கோடியில் தோழி மகளிர் விடுதி கட்டுமான பணிக்கு பூஜை
ரூ.5.19 கோடியில் தோழி மகளிர் விடுதி கட்டுமான பணிக்கு பூஜை
ரூ.5.19 கோடியில் தோழி மகளிர் விடுதி கட்டுமான பணிக்கு பூஜை
ADDED : மே 22, 2025 12:16 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ரூ.5.19 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள தோழி மகளிர் விடுதி கட்டுமான பணியை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் காஞ்சிரங்காலில் தரைத்தளம், முதல், இரண்டு மாடி கட்டடம் தோழி விடுதிக்காக கட்டப்பட உள்ளன. இதில், 50 படுக்கை வசதியுடன் விடுதி செயல்பட உள்ளது. விடுதி கட்டுமான பணி தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் கட்டப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜைக்கு கலெக்டர் தலைமை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் சரோஜா, இளநிலை பொறியாளர் பாண்டியராஜன், சிவகங்கை ஆர்.ஐ., பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.