ADDED : அக் 23, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவில் முன் சிவகங்கை எம்.எல்.ஏ., நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சுதந்திர போராட்ட வீரர் மருதுபாண்டியர் கலையரங்கம் கட்டம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்நாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி, சேவியர்தாஸ், கோபி, ஸ்ரீதரன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஜாக்குலின் கலந்து கொண்டனர்.

