தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 15, 2026 07:03 PM

ADDED : அக் 15, 2026 06:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 07:03 PM ADDED : அக் 15, 2026 06:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை தலைமை தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய புறநிலை ஊழியர் சங்க கோட்ட தலைவர் செல்வன் தலைமை வகித்தார். எழுத்தர் சங்க கோட்ட தலைவர் நாகலிங்கம், செயலர் மாதவன் முன்னிலை வகித்தனர். அகில இந்திய புறநிலை ஊழியர் சங்க கோட்ட செயலாளர் தமிழ்வாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். எட்டாவது சம்பளக்குழுவில் ஜி.டி.எஸ்., ஊழியர்களை சேர்க்க தனி சம்பள குழுவை அமைக்க வேண்டும். பென்ஷன் , பணிக்கொடை, மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும். கோட்ட அளவில் ஊழியர் சார்ந்த நலன் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் ஊழியர் சங்க பிரதிநிதிகள் சிவக்குமார் பூமிநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் முருகன், அஞ்சல் 4 தென்மண்டல செயலாளர் தர்மலிங்கம் முன்னாள் பி 4 தலைவர் ராஜகோபால் பி 3 செயலாளர் காளிதாஸ் ஆலோசகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us