UPDATED : அக் 15, 2026 06:39 PM
ADDED : அக் 15, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரி முன்பு, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் காரைக்குடி கிளை சார்பில் போராட்டம் நடந்தது.
நிதித்துறை வெளியிட்ட 18 ஆண்டு பணி நிறைவடையாதவர்களுக்கு இடைக்கால பென்ஷன் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பை கண்டித்தும், தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை திரும்ப பெறக் கோரியும் போராட்டம் நடந்தது. கிளைத் தலைவர் முருகன் வரவேற்றார். செயலாளர் பாரதி போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சிவகங்கை ராமநாதபுரம் மண்டல செயலாளர் அசோக்குமார் பேசினார். பாரதி ராணி நன்றி கூறினார்.
