UPDATED : அக் 15, 2026 06:26 PM
ADDED : அக் 15, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி தலைமை அஞ்சலகத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அஞ்சல் 4 அனைத்து இந்திய கிராமிய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அஞ்சல் ஊழியர் சங்க பிரதிநிதிகள் சிவக்குமார் பூமிநாதன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் முருகன், அஞ்சல் 4 தென்மண்டல செயலாளர் தர்மலிங்கம் முன்னாள் பி 4 தலைவர் ராஜகோபால் பி 3 செயலாளர் காளிதாஸ் ஆலோசகர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர். அஞ்சல் துறையை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும் 5 லட்சம் கிராஜுவிட்டி வழங்கிடவும், எட்டாவது ஊதிய குழுவில் ஜி.டி.எஸ்., ஊழியர்களை சேர்த்திட வலியுறுத்தியும், கம்லேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
