/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இறகுசேரி கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
/
இறகுசேரி கோயில் கும்பாபிஷேகம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 23, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை இறகுசேரி மும்முடிநாதர் கோயில் கும்பாபிஷேகம் நாளை 24 ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் சனிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்த எதிர்ப்பு கிளம்பியது. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கோர்ட்டில் நீதிபதி உத்தரவில் கமிஷன் அமைக்கப்பட்டு இரு தினங்களுக்கு முன் கோயிலை ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். விசாரித்த நீதிபதி கும்பாபிஷேக தேதியை மாற்றி வேறு தேதியை முடிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து நாளை தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் நடத்த இருந்தது ரத்து செய்யப்பட்டு உள்ளது.முழு உத்தரவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.