ADDED : அக் 24, 2024 05:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் நுழைவு வாயில் முன் உள்ள பள்ளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரியுள்ளனர்.
இக்கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பாக உள்ள நடைபாதையில் சிமென்ட் தளம் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. அண்மையில் பெய்த மழையில் சிமென்ட் தளத்தின் கீழ் மண் அரிப்பு ஏற்பட்டு முகப்பில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
பக்தர்கள் கோயிலுக்குள் செல்லும் வழி என்பதால் தளத்தை பெயர்த்து கீழே உள்ள மண் அரிப்பை முழுமையாக சரி செய்து தளத்தை உறுதியாக புதுப்பித்திடபக்தர்கள் கோரியுள்ளனர்.

