/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை ரோட்டில் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
/
தேவகோட்டை ரோட்டில் பள்ளம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 10, 2024 05:39 AM

காரைக்குடி, : காரைக்குடி தேவகோட்டை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
காரைக்குடி நகராட்சியில் 2017ல் ரூ.112.5 கோடியில் பாதாளச்சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, ரூ.140 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. தேவகோட்டை ரஸ்தாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செல்லும் வழியில் காரைக்குடி தேவகோட்டை நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக நேற்று மாலை, திடீரென்று சாலை உடைந்து, நடுவே பெரிய பள்ளம் உருவானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குடிநீர் வழங்கல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

