/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ராம் நகரில் மின்தடையால் அவதி
/
மானாமதுரை ராம் நகரில் மின்தடையால் அவதி
ADDED : ஜூலை 18, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ராம்நகரில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மானாமதுரை விரிவாக்க பகுதியான ராம்நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ராம் நகர் ஊரணி அருகே டிரான்ஸ்பார்மர் உள்ள நிலையில் அடிக்கடி இதில் ஏற்படும் பழுது காரணமாக மின்தடை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நேற்று காலை 6:00 மணி வரை நீடித்ததால் வீடுகளில் மக்கள் துாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.