/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் ஆடி பிறப்பன்று மின் தடை
/
திருப்புவனத்தில் ஆடி பிறப்பன்று மின் தடை
ADDED : ஜூலை 16, 2025 01:13 AM
திருப்புவனம் : நாளை ஆடி பிறப்பன்று மாதாந்திர மின் பராமரிப்பு என மின்வாரியம் மின்தடை அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்புவனம் துணை மின் நிலையம் மூலம் நகர் மற்றும் ஊரக பகுதிகளுக்கு மின்சார விநியோகம் செய்யப்படுகிறது. திருப்புவனம் நகரில் மட்டும் பத்தாயிரம் மின் இணைப்புகள் உள்ளன. திருப்புவனத்தில் கடந்த சில மாதங்களாகவே அறிவிக்கப்படாத மின்வெட்டு நிகழ்கிறது. தினசரி பல முறை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
மின்தடை குறித்த குறுஞ்செய்தி பெயரளவிலேயே உள்ளது. நாளை 17ம் தேதி ஆடி பிறக்கின்றது. ஆடி முதல் நாள் கிராமங்களில் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம், ஆனால் மின்வாரியம் திருப்புவனம், பொட்டப்பாளையம், அரசனூர், பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளது. விசேஷ நாட்களில் கூட மின்சாரத்தை முழுமையாக விநியோகிக்காமல் மின்வாரியம் அலட்சியப்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.