ADDED : அக் 01, 2024 05:02 AM

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பிரதோஷ நாயனார் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவிலில் நந்திக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை, நித்தியகல்யாணி அம்பாளுக்கும் கைலாசநாதர் பெருமானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நித்திய கல்யாணிபுரம் திருக்கயிலேஸ்வரர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜையை தொடர்ந்து திருகயிலேஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆதிசங்கரர் கோவில், கலங்காது கண்ட விநாயகர் கோவிலில் சிவபெருமானுக்கும், ஆலமரத்து முனீஸ்வரர் கோவிலில் முனீஸ்வரருக்கும், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடந்தன.
வெளிமுத்தி பழம்பதிநாதர் கோவிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நந்திபெருமான், பழம்பதிநாதர் , பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.