ADDED : அக் 01, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் புரட்டாசி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் நேற்று நடைபெற்ற புரட்டாசி பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். சிவனடியார்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர்.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலிலும்,வேம்பத்துார் ஆவுடையநாயகி சமேத கைலாசநாதர் கோயிலிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனை நடைபெற்றன.