/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
/
ரோட்டில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
ADDED : டிச 27, 2024 04:51 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ரோட்டில் கிடந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
திருப்புத்துார் கணேஷ் நகர் நாகராஜன் மகன் சரவணன். இவரது வீட்டிற்கு முன் பை ஒன்று கிடந்ததை எடுத்து பார்த்த சரவணன் பை கனமாக இருந்ததை அடுத்த திருப்புத்துார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் பையை திறந்து பார்த்த போது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தில் 3 செட் தோடு, மாட்டல் மற்றும் 2 ஏ.டி.எம்., கார்டு, பான் கார்டு, ஒரு அலைபேசி, ரொக்கம் ரூ. 1500 இருந்தது.
அந்த அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்த போது ஏட்டு சேவுகமூர்த்தி பேசியதில் பையை தொலைத்தது கணேஷ் நகரைச் சேர்ந்த மலையாண்டி மகள் சுமதி என்பதும், டூ வீலரில் செல்லும் போது பை தவறி விழுந்ததும் தெரிய வந்தது. பின்னர் சுமதி போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டு நகை, பொருட்களை டி.எஸ்.பி., செல்வகுமார் ஒப்படைத்தார். சரவணனுக்கும் பாராட்டு தெரிவித்தார்.