/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரதமரின் வீடு திட்ட பயனாளிகளுக்கு 3 ஆண்டாக நிதி விடுவிக்காமல் இழுத்தடிப்பு
/
பிரதமரின் வீடு திட்ட பயனாளிகளுக்கு 3 ஆண்டாக நிதி விடுவிக்காமல் இழுத்தடிப்பு
பிரதமரின் வீடு திட்ட பயனாளிகளுக்கு 3 ஆண்டாக நிதி விடுவிக்காமல் இழுத்தடிப்பு
பிரதமரின் வீடு திட்ட பயனாளிகளுக்கு 3 ஆண்டாக நிதி விடுவிக்காமல் இழுத்தடிப்பு
ADDED : ஆக 14, 2025 11:19 PM
சிவகங்கை, ; மாவட்டத்தில் 2021--2022 ம் ஆண்டில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கட்டி முடித்த வீடுகளுக்கு நிதியை விடுவிக்காமல் 3 ஆண்டாக இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் (2021--2022) ஆண்டுக்கு 307 வீடுகள் ஒதுக்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டிற்கும் நுாறு நாள் பணியாளர், கட்டுமான பொருட்கள் என ஒவ்வொரு கட்டுமான பணி வீதம் 4 விதத்தில் முடிக்கும் வீடுகளுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.2.82 லட்சம் வரை அந்தந்த ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை வழங்கிய பின், பயனாளிகள் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் விடுவிக்கப்படும்.
இம்மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை ஒன்றிய பொறியாளர்கள் தொடர்ந்து பணிகளை கண்காணிக்காமல் விட்டுவிட்டு, மாநில அரசின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 307 வீடுகளில் பலர் வீடுகள் கட்டி முடித்து 3 ஆண்டுகளாகி விட்டன.
முடிந்த வீடுகளை கள ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை வழங்காததால் 4 ம் கட்ட நிலுவை தொகை ரூ.57 ஆயிரம் வரை கிடைக்காமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிர்வாகம், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டி முடித்த பயனாளிகளுக்கு 4 ம் கட்ட நிலுவை தொகையை விடுவிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மெத்தனமே காரணம் நிதி கிடைக்காத பயனாளிகள் கூறியதாவது, மாவட்டத்தில் 2021- - 2022ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 307 வீடுகளின் பயனாளிகளில் சிலர் முழுமையாக கட்டாமல் விட்டு சென்று விட்டனர்.
கட்டிய பயனாளிகளின் வீடுகளையாவது ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை வழங்காததால் அவர்களுக்கு பணம் விடுவிக்க முடியாத நிலை உள்ளது என்றார்.