/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்சை மறித்த தனியார் பஸ் ஊழியர்கள்
/
அரசு பஸ்சை மறித்த தனியார் பஸ் ஊழியர்கள்
ADDED : பிப் 17, 2024 11:04 PM
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் அரசு பஸ்சை மறித்து தனியார் பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் மக்கள் சிரமப்பட்டனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை புதிய வழிதடத்தில் அரசு பஸ் ஒன்று மதுரைக்கு புறப்பட்டுள்ளது.
இந்த அரசு பஸ்சை தனியார் பஸ் ஊழியர்கள் மறித்து நிறுத்தியுள்ளனர். தனியார் பஸ் செல்லும் நேரத்தில் அரசு பஸ் இயக்குவதால் தனியார் பஸ்சிற்கு இழப்பு ஏற்படுவதாக கூறி அந்த தனியார் பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் அரைமணி நேரம் காத்திருந்தனர்.
தனியார் பஸ் ஊழியர்களிடம் போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தனியார் பஸ் ஊழியர் ஒதுங்கினர். பின்னர் அரசு பஸ் பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
சிவகங்கை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கவியரசு கூறுகையில், காலை 8:25 முதல் 8:28 க்குள் தனியார் பஸ் சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டும். அதன் பிறகு அரசு பஸ் இயக்கப்படும்.
தனியார் பஸ் ஊழியர்கள் அரசு பஸ்சை மறித்தது தவறு. பஸ் பயணிகள் அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்து இருந்துள்ளனர். இது குறித்து ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்துள்ளேன். தனியார் பஸ் ஊழியர்கள் மீது துறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.