/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய நெடுஞ்சாலை தாசில்தார் அலுவலகத்திற்கு வாடகை பாக்கி இடத்தை காலி செய்வதில் சிக்கல்

ADDED : அக் 14, 2024 08:36 AM
மானாமதுரை, ; சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செயல்பட்ட தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) தனி தாசில்தார் அலுவலகத்திற்கு 7 மாதமாக வாடகை பாக்கி, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மதுரை -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கென, கடந்த சில ஆண்டிற்கு முன் மானாமதுரை மரக்கடை பஸ் ஸ்டாப் அருகே தனியார் கட்டடத்தில் வாடகைக்கு தனி தாசில்தார் அலுவலகம் செயல்பட்டது. இந்த அலுவலகத்தில் தாசில்தார், ஆர்.ஐ., சர்வேயர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உட்பட 10 பேர் வரை பணிபுரிந்தனர்.
இந்நிலையில் இம்மாவட்டத்தில் 6 இடங்களில் செயல்பட்ட தனி தாசில்தார் அலுவலகத்தை, மூன்றாக குறைத்து அனைத்து அலுவலகத்தையும், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்து விட்டனர்.
இந்நிலையில், மானாமதுரை தனியார் கட்டடத்தில் இயங்கிய அலுவலகத்திற்கு கடந்த 7 மாதங்களாக வாடகை கொடுக்கவில்லை.
அதே போன்று இந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் 7 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இது தவிர அலுவலகத்திற்கான மின்கட்டணம் கூட செலுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டனர். இதனால், அலுவலகம் இல்லாதபோதும், அங்கிருந்து பொருட்களை காலிசெய்ய முடியாமல் வருவாய்துறையினர் தவிக்கின்றனர்.