/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெளிநாட்டில் வசிப்போர் ரேஷனில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல்
/
வெளிநாட்டில் வசிப்போர் ரேஷனில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல்
வெளிநாட்டில் வசிப்போர் ரேஷனில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல்
வெளிநாட்டில் வசிப்போர் ரேஷனில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல்
ADDED : ஏப் 17, 2025 02:39 AM
சிவகங்கை:தமிழக ரேஷன் கடைகளில் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்), முன்னுரிமை (பி.எச்.எச்.,) கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் வெளிநாட்டில் வசிப்போரின் கை ரேகைகளை பதிவு செய்வதில் சிக்கல் நிலவுகிறது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநில வாரியாக 'அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்)' கார்டுதாரர்களுக்கு 35 கிலோ, முன்னுரிமை கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற ஏதுவாக இவ்விரு திட்டம் மூலம் அரிசி பெறும் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து விற்பனையாளர்கள் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகளை பதிவு செய்து வருகின்றனர். இதற்கான கால அவகாசம் ஏப்., 30 வரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அளவில் இவ்விரு கார்டுகளின் கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 91 ஆயிரத்து 296 பேர் ஆகும். இவர்களில் ஏப்., 2 வரை 2 கோடியே 92 லட்சத்து 59 ஆயிரத்து 754 பேர் கைரேகைகளை பதிவு (83.38 சதவீதம்) செய்துள்ளனர். மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகளையும் பதிவு செய்தால் மட்டுமே தொடர்ந்து இலவச அரிசி ரேஷனில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரும் பாலான ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இங்கு ரேஷன் கார்டுகளை வைத்துக்கொண்டு வேலை நிமித்தமாக வெளிமாநில, நாடுகளில் வசிப்பதால் அவர்களது கைரேகைகளை பதிவு செய்ய முடியாமல் விற்பனையாளர்கள் தவித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் உள்ளோர், இறந்தோர் விவரம் சேகரிப்பு :கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சிக்கல் குறித்து அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்தந்த விற்பனையாளர்கள் வீடு தோறும் சென்று ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் வெளிநாட்டில் வசிப்போர் எண்ணிக்கை, இறந்தோர் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.