/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சொத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிக்கு 'காப்பு'
/
சொத்துக்காக அண்ணனை கொன்ற தம்பிக்கு 'காப்பு'
ADDED : அக் 01, 2025 08:02 AM
சிவகங்கை; சொத்துக்காக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், கண்ணேரியேந்தல் ஆறுமுகம், 50. இவரது தம்பி கணபதி, 45. இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்தது.
நேற்று முன்தினம் அண்ணன் வீட்டிற்கு சென்ற தம்பி, பூர்வீக வீட்டை காலி செய்ய கூறி, தகராறு செய்தார்.
மேலும், 'நீ செத்தால் தான் எனக்கு சொத்து முழுசா கிடைக்கும்' எனக்கூறி, அரிவாளால் அவரின் தலை மற்றும் கைகளில் வெட்டினார். அங்கு வந்த அவரது மற்றொரு சகோதரர் அர்ச்சுணனை கண்டதும், கணபதி தப்பியோடினார்.
படுகாயமடைந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேவகோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பரிசோதித்த டாக்டர், ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அர்ச்சுணன் புகாரில், தேவகோட்டை தாலுகா போலீசார், கணபதியை கைது செய்தனர்.