/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் சுரங்கப்பாதை மூடப்பட்டதை கண்டித்து மறியல்
/
காரைக்குடியில் சுரங்கப்பாதை மூடப்பட்டதை கண்டித்து மறியல்
காரைக்குடியில் சுரங்கப்பாதை மூடப்பட்டதை கண்டித்து மறியல்
காரைக்குடியில் சுரங்கப்பாதை மூடப்பட்டதை கண்டித்து மறியல்
ADDED : நவ 11, 2024 04:21 AM
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சுரங்கப்பாதையை மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவராவிட்டால், ரயில் மறியல்போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில்வே குடியிருப்பு செல்வதற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே லட்சுமி நகர், பொன்நகர், இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் சுரங்கப்பாதை மழைநீரால் நிரம்பி காணப்பட்டது.
இந்த நீரில் மூழ்கி பீட்டர் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டன. இந்த சுரங்கபாதையை மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி, கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். இல்லாவிடில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அழகப்பாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்துள்ளனர்.