/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்த்து மறியல்
/
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்த்து மறியல்
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்த்து மறியல்
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்த்து மறியல்
ADDED : டிச 11, 2025 05:34 AM
சிவகங்கை: சிவகங்கையில் கவுரி விநாயகர் கோயில் இடத் தில் வீடு கட்டியதை அகற்ற முயற்சிப்பதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை கவுரிவிநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் மேலுார் ரோட்டில் காமராஜர் காலனி மற்றும் தென்னீர்வயல் குரூப்பில் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இவற்றை அகற்ற வேண்டும் என ஹிந்து அறநிலையத்துறையினர் நீதிமன்றம் மூலம் தீர்ப்பாணை பெற்றனர்.
காமராஜர் காலனியில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகளை அகற்ற உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சிவகங்கை - மேலுார் ரோட்டில் காமராஜர் காலனியில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் மல்லிகார்ஜூனன் தலைமையில் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காமராஜர் காலனி மக்கள் நீதி மன்ற உத்தரவிற்கு அப்பீல் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிச., 17ல் ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் முன்னிலையில் காமராஜர் காலனி மக்கள் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காமராஜர் காலனியில் மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

