/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதிரியார் மாற்றத்திற்கு எதிர்ப்பு சிவகங்கை பிஷப் இல்லம் முற்றுகை சிவகங்கை பிஷப் இல்லம் முற்றுகை

ADDED : ஏப் 30, 2025 07:10 AM

சிவகங்கை : தேவகோட்டை அருகே புளியால் பெரியநாயகி சர்ச் பாதிரியார் அம்புரோஸ் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவர்கள் சிவகங்கையில் பிஷப் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை மறைமாவட்ட பிஷப் இல்லத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க சர்ச்கள் உள்ளன.
நேற்று பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் சிவகங்கை பிஷப் இல்லத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
அதில், இரு மாவட்ட சர்ச் பாதிரியாருக்கு மாறுதல் வழங்கப்பட்டன. அதன்படி புளியால் பெரியநாயகி சர்ச் பாதிரியார் அம்புரோஸ் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கும், பரமக்குடி அருகே எம்.மிக்கேல்பட்டினம் பாதிரியார் சுவாமிநாதன் புளியாலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
முற்றுகை
புளியால் சர்ச் பாதிரியார் பணியேற்று ஒரு ஆண்டு ஆன நிலையில், அவரை மாற்றக்கூடாது எனக்கூறி புளியால் பங்கு இறைமக்கள் காலை 9:00 மணியில் இருந்து மதியம் 1:00 மணி வரை மறைமாவட்ட பிஷப் இல்லத்தை முற்றுகையிட்டனர். இவர்களிடம் பிஷப் லுார்து ஆனந்தம் பேசினார்.
நிர்வாக நலன் கருதி அனைத்து சர்ச் பாதிரியார்களுக்கும் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் எனக்கூறியதால் முற்றுகையை கைவிட்டனர்.
நிர்வாக ரீதியான மாற்றம்
சிவகங்கை மறைமாவட்ட இல்ல பொருளாளர் ஆரோன் கூறியதாவது: பிஷப் தலைமையில் நடந்த கூட்ட முடிவுபடியே, நிர்வாக ரீதியாக தான் பாதிரியார்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.