/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வரி உயர்வை கண்டித்து முற்றுகை போராட்டம்
/
வரி உயர்வை கண்டித்து முற்றுகை போராட்டம்
ADDED : மார் 22, 2025 04:59 AM
காரைக்குடி: வரி உயர்வை கண்டித்து காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தை மாநகர வரி செலுத்துவோர் மக்கள்மன்றக்குழுவினர் முற்றுகையிட்டனர்.
காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், வரி வசூல் செய்யும் அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுவதாக தொழில் வணிக கழகத்தினர் புகார் கூறினர்.
இந்நிலையில் நேற்று, காரைக்குடி மாநகர வரி செலுத்துவோர் மக்கள் மன்ற குழுவினர், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதிகாரிகள் யாரும் இல்லாததால், வரியை குறைக்க வலியுறுத்தியும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் துணை மேயர் குணசேகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதில் தொழில் வணிககழகத் தலைவர் சாமி திராவிட மணி, செயலாளர் கண்ணப்பன் பொருளாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.