/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொ.மு.ச., செயலாளரை கண்டித்து போராட்டம்
/
தொ.மு.ச., செயலாளரை கண்டித்து போராட்டம்
ADDED : மார் 20, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில், தி.மு.க., வின் தொழிற்சங்கமான, தொ.மு.ச., மண்டல செயலாளரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடந்தது.
முற்றுகை போராட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காரைக்குடி மண்டலத்தில், தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வில் பல்வேறு பிரச்னை நிலவி வருகிறது.
மண்டலச் செயலாளர், தன்னிச்சையாக முடிவெடுப்படுவதாகவும், 200-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களை நீக்கியதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று திடீர் முற்றுகை போராட்டம் நடந்தது. முற்றுகைப் போராட்டத்தால் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை.