/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தினசரி மார்க்கெட்டிற்கு இடம் தேர்வு தேவகோட்டை ஒன்றிய கூட்டத்தில் எதிர்ப்பு
/
தினசரி மார்க்கெட்டிற்கு இடம் தேர்வு தேவகோட்டை ஒன்றிய கூட்டத்தில் எதிர்ப்பு
தினசரி மார்க்கெட்டிற்கு இடம் தேர்வு தேவகோட்டை ஒன்றிய கூட்டத்தில் எதிர்ப்பு
தினசரி மார்க்கெட்டிற்கு இடம் தேர்வு தேவகோட்டை ஒன்றிய கூட்டத்தில் எதிர்ப்பு
ADDED : செப் 21, 2024 05:33 AM
தேவகோட்டை: தேவகோட்டை ஒன்றிய குழு கூட்டம் தலைவர் பிர்லா கணேசன் (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ரவி (தி.மு.க.): கடையனேந்தல் பள்ளி புதிய கட்டடம் திறக்கப்படாமலேயே சேதமடைந்துள்ளது. இரண்டு மாதமாக கூறி வருகிறேன். பிரதமர் கிராமச் சாலை திட்டத்தில் நமது ஒன்றியத்திற்கு ஒரு ரோடு கூட வரவில்லை.
பொறியாளர்: இன்று (நேற்று) மாலைக்குள் பள்ளி வேலையை சரி செய்துவிட்டு பேசுகிறேன். பிரதமர் சாலை திட்டத்தில் ஏற்கனவே 21 ரோடு அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதில் ஆறு ரோடு வேலை முடியாததால் புதிய ரோடு அனுமதி கிடைக்கவில்லை.
சேவியர் ஆரோக்கிய ஜான்சி ராணி (தி.மு.க.): புளியால் அரசு உயர்நிலைப்பள்ளி செல்லும் ரோடு மோசமாக உள்ளது.
அதிகாரிகள்: நபார்டு திட்டத்தில் செய்ய இருந்தோம். தற்போது வேறு திட்டத்தின் மூலம் செய்ய உள்ளோம்.
ரவி: தேவகோட்டை ஒன்றிய அலுவலர் குடியிருப்பு பகுதியை நகராட்சி தினசரி மார்க்கெட்டிற்காக எடுக்க தீர்மானம் போட்டு உள்ளனர். அந்த இடத்தை விட்டு தரக்கூடாது. வேலி போடுங்கள்.
தலைவர்: நானும் பார்த்தேன். கலெக்டரிடம் நேரில் நம்முடைய இடம் என்பது பற்றி விளக்கினேன். பல ஆண்டுகளாக அலுவலர்கள் குடியிருப்பு இருந்தது.
எட்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.75 லட்சத்தில் விருந்தினர் விடுதி கட்ட முடிவு செய்ததாகவும், பொது நிதியில் நிதி இல்லாததால் கட்டவில்லை என்றும் தெரிவித்தேன். இருப்பினும் கலெக்டர் பல காரணங்கள் சொன்னார்.
சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டேன். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி ஒன்றியத்தின் சார்பில் முள் வேலி அமைத்து பெயர் பலகை வைப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.