/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மனு அளிக்கும் போராட்டம்
/
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மனு அளிக்கும் போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மனு அளிக்கும் போராட்டம்
கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மனு அளிக்கும் போராட்டம்
ADDED : நவ 12, 2024 05:01 AM
சிவகங்கை: தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நஷ்டத்தைஏற்படுத்தும் மருந்தகம், வேளாண் கருவிகள் வாங்கும் திட்டத்தை திரும்ப பெறக்கோரி, சங்கத்தினர் இணை பதிவாளரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை, கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
இணை செயலாளர்கள் ராமசாமி, முத்துமாயாண்டி, துணை தலைவர்கள் பரமானந்தம், கோபிநாதன் பங்கேற்றனர். கூட்டுறவு வங்கிகள் மூலம் வேளாண் கருவி வாங்கி, வாடகைக்கு விடும் திட்டம், முதல்வர் மருந்தகம் துவக்கும் திட்டத்தால் நஷ்டம் ஏற்படும்.
அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திடம், சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.