ADDED : ஆக 26, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் ஆக.18ம் தேதி அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் தொடங் கியது.
பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், 25 மாதங் களாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பலன்களை வழங்க வேண்டும், ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் தெய்வீரபாண்டியன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.
போராட்டம் குறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடைபெறாததால் 8வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது.

