/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு மறியல்
/
குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு மறியல்
ADDED : நவ 26, 2024 05:18 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் குடியிருப்புகளுக்கு பாதை வசதி கேட்டு மறியல் நடந்தது.
இப்பேரூராட்சியில் சேவுகப்பெருமாள் கோயில் அருகே மழுவேந்தி நகரில் 75க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. இவர்களுக்கு 2000ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்ட நிலையில் முறையான பாதை வசதி இல்லாமல் 25 ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு பாதை வசதி செய்து தர வலியுறுத்தி நேற்று மா.கம்யூ., சார்பாக சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, தாலுகா செயலாளர் காந்திமதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.