/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2025 06:46 AM
சிவகங்கை: காளையார்கோவில் அருகே புலியடிதம்பத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் கோரி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காளையார்கோவில் அருகே புலியடிதம்பம் விவசாயி பவுல்ராஜ் 49. இவர், ஏப்.,22ம் தேதி மாலை 4:30 மணிக்கு தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
ஐயப்பன் கோயில் அருகே சென்ற போது, மின்கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து கிடந்தது தெரியாத நிலையில், ரோட்டை கடந்த போது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
உயிரிழந்த விவசாயி பவுல்ராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி, அக் குடும்பத்தினருடன், புலியடிதம்பம் கிராம மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
மின்வாரிய நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ இதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நேற்று புலியடிதம்பத்தை சேர்ந்த பவுல்ராஜ் மனைவி குழந்தையம்மாள், மகன்கள் ஆல்வின் 30, செல்வா 27, உட்பட கிராம மக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் பொது குறைதீர் கூட்டத்தில் துணை கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர்.