ADDED : ஆக 07, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மண்டல தலைவர் சுப்பிரமணி தலைமையேற்றார். ஞானபிரகாசம் வரவேற்றார். மண்டல பொதுச்செயலாளர் விஜய சுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து கழக மாநிலத் துணைத் தலைவர் மணவழகன், தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் முருகேசன் பேசினர்.
எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, கான்ட்ராக்ட் முறையை கைவிட வலியுறுத்தியும், சம்பள முரண்பாடுகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.