/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
தி.மு.க., அரசை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 14, 2025 02:30 AM

சிவககங்கை: சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் தொடர்ந்து 3 கொலைகள் நடந்ததை கண்டித்தும், தி.மு.க., அரசை கண்டித்தும் அந்த பகுதி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி நாட்டாகுடியில் மீண்டும் கிராம மக்கள் குடியேற வழிவகை செய்யவும், அங்குள்ள தொடக்க பள்ளியை மீண்டும் திறக்க அரசை வலியுறுத்தி சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் அமைப்பு செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன், ராமச்சந்திரன், கற்பகம், குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட சார்பு அணி செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், சிவாஜி, அருள் ஸ்டீபன், செல்வமணி, கோபி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா, இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.