ADDED : ஏப் 08, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ராஜாதுரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர்கள் தங்கமுனியாண்டி, சதீஸ், மோகன், கிருஷ்ணமூர்த்தி, மாயமுருகன் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் படியும் அரசாணை 56ன் படியும்இருகட்டமாக கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் படிப்படியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணிநிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் 12 மாதமும் வழங்க வேண்டும். பணிபாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும்.
பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு குழுக்காப்பீட்டுத் திட்டம் ஏற்படுத்திதர வேண்டும்உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

