/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க போராட்டம்
/
மானாமதுரை மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க போராட்டம்
மானாமதுரை மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க போராட்டம்
மானாமதுரை மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க போராட்டம்
ADDED : ஏப் 25, 2025 06:30 AM

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க கோரி தாசில்தார் அலுவலகம் முன் சர்வ கட்சியினர், விவசாயிகள், வர்த்தகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் 3.5 ஏக்கர் பரப்பளவில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை துவக்க முடிவு செய்தனர்.
மானாமதுரையில் நடந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்திலேயே சர்வ கட்சியினர், விவசாயிகள், வர்த்தகர்கள் இந்த ஆலைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, ஆலைக்கு தடை விதிக்க கோரினர்.
ஆனால் சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் சிப்காட் வளாகத்தில்  ஆலை கட்டுமான பணியை தனியார் நிறுவனம் நடத்தி வந்தது.
இதில் அதிருப்தியான நிலையில் சிவகங்கை கலெக்டரிடம் மனு அளித்தனர். பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த நிலையில், கலெக்டர் ஆஷா அஜித், ஆலை கட்டுமான பணியை மட்டும் நிறுத்தி வைக்குமாறு உத்தர விட்டார்.
தர்ணா போராட்டம்
இந்நிலையில் நேற்று மானாமதுரை தாசில்தார் அலுவலகம் முன், ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சிப்காட் வளாகத்தில் மருத்துவ சுத்திகரிப்பு ஆலை வரவே கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
நிரந்தர தடை விதிக்க வேண்டும்
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆர்எம்., முருகன் கூறியதாவது, மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை வந்தால், தமிழகம், கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை எரித்து சுத்திகரிப்பு செய்வார்கள்.
கழிவுகளை எரிக்கும் போது வரும் வாயுக்களால் சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள நகராட்சி, கிராம ஊராட்சி மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரகம், சுவாச கோளாறு, கால்நடைகள் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும். எனவே அரசு, இந்த ஆலைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும், என்றார்.

