/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலிப்பணியிடங்களை நிரப்ப அட்டை அணிந்து போராட்டம்
/
காலிப்பணியிடங்களை நிரப்ப அட்டை அணிந்து போராட்டம்
ADDED : மே 16, 2025 03:17 AM
சிவகங்கை: அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பணியாற்றக்கூடிய அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்களான டாக்டர்கள் அரசாணை 354 ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பேராசிரியர் பதவி உயர்வு தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.
எம்.பி.பி.எஸ்., தகுதி பெற்ற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். சிவகங்கையில் ஒருங்கிணைப்பாளர் நாச்சியப்பன் தலைமை வகித்தார்.