/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்
/
சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்
சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்
சிவகங்கை விவசாயிகளுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கல்
ADDED : டிச 18, 2025 05:33 AM
சிவகங்கை: விவசாய நிலங்களுக்கு தட்கல் திட்டத்தில் புதிய மின் இணைப்பு பெற ஆன்லைன் மூலம் விவசாயிகள் திட்ட தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு 50 ஆயிரம் விவசாய நிலங்களுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்தது. முதல் தவணையாக 17 ஆயிரம் மின் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்தனர். அடுத்த கட்டமாக 2026 ம் ஆண்டு மார்ச் 31 க்குள் 33 ஆயிரம் விவசாய நிலங்களுக்கு தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக 250 விவசாய நிலங்களுக்கு தட்கல் முறையில் மின்இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்து, இது வரை 208 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளனர். இன்னும் 42 விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கும்பணி நிலுவையில் இருந்து வருகிறது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கு 385 விவசாய நிலங்களுக்கு தட்கலில் மின்இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக விவசாயிகள் திட்ட தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.