/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பள்ளிகளுக்கு கேடயம் வழங்கல்
/
அரசு பள்ளிகளுக்கு கேடயம் வழங்கல்
ADDED : செப் 09, 2025 09:40 PM
சிவகங்கை; தமிழகத்தில் நுாற்றாண்டு கடந்த 2211 அரசு பள்ளிகளை தேர்வு செய்து, அவற்றை சிறப்பிக்கும் விதமாக நுாற்றாண்டு திருவிழா நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட அளவில் பிரான்மலை, எஸ்.வி., மங்கலம், கொம்புக்காரனேந்தல், கல்லல், படமாத்துார், செம்பனுார், திருக்களாப்பட்டி, முறையூர், முனைவென்றி ஆகிய 9 தொடக்கப்பள்ளிகளும், கண்ணங்குடி, திருப்பாச்சேத்தி தெற்கு, சோழபுரம், திருப்புவனம் வடக்கு, செய்களத்துார், கீழப்பசலை, தேவகோட்டை நகராட்சி 14 வது வார்டு பள்ளி, கண்ணமங்கலம் ஆகிய 8 நடுநிலை பள்ளிகள் என 17 அரசு பள்ளிகள் நுாற்றாண்டு விழாவை கொண்டாடின.
இப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று, கேடயத்தை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன், வட்டார கல்வி அலுவலர் கருப்புச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.