/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மிளகாய் பயிர் இழப்பீடு ரூ.3 கோடி வழங்கல்
/
மிளகாய் பயிர் இழப்பீடு ரூ.3 கோடி வழங்கல்
ADDED : அக் 11, 2024 05:03 AM
சிவகங்கை: மாவட்டத்தில் 2023----2024ல் குறுவை பருவத்தில் மிளகாய் பயிரிட்டு, காப்பீடு செய்த 6799 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 47 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2023-2024) குறுவை பருவத்தில் இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை பகுதியில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்திருந்தனர்.மிளகாய் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமிய தொகை செலுத்தியிருந்தனர்.
கடும் வறட்சியால் இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், தாயமங்கலம், திருவுடையார்புரம், காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டி, மானாமதுரை, முத்தனேந்தல், செய்களத்துார் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான பயிர் இழப்பீடு தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 6799 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.3 கோடியே 47 ஆயிரத்து 660யை ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த விபரங்களை அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

