ADDED : நவ 27, 2024 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சென்னையில் துணை முதல்வர் உதயநிதி, விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான விளையாட்டு மற்றும் முதலுதவி உபகரணங்களை வழங்கி, இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதிக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை கலெக்டர் ஆஷா அஜித், மாணவர்களுக்கு வழங்கினார். மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் வரவேற்றார்.
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
அதில், மாணவர்களுக்கான வாட்ச், ஐஸ் பேக், டீ - சர்ட், டீ மக் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றன. விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டியை கலெக்டர் துவக்கி வைத்தார்.