/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை--கண்ணங்குடி குறுகிய ரோடால் அதிக விபத்து: கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

ADDED : நவ 08, 2025 01:30 AM

சிவகங்கை: தேவகோட்டை ---- கண்ணங்குடி மாநில நெடுஞ்சாலை குறுகியதாக இருப்பதால் அடிக்கடி நடக்கும் விபத்தை தவிர்க்க, ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மன்றத்தினர் புகார் அளித்தனர்.
தேவகோட்டை சிவன் கோயிலில் இருந்து வாரச்சந்தை, முத்துபெரியார் நகர், தாழையூர், சிறுவாச்சி வழியாக கண்ணங்குடி வரை 8 கி.மீ., துாரத்திற்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த ரோடு வழியாக சிறுவாச்சியில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல், ஆவுடையார்கோயில் வழியாக அறந்தாங்கி செல்லலாம்.
கண்ணங்குடி, கரூர் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரோடு செல்கிறது. இந்த ரோடு புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை தேவகோட்டையுடன் இணைப்பதால் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளன.
இவ்விரு மாவட்ட எல்லைகளில் இருந்து பள்ளி, கல்லுாரிக்காக மாணவ, மாணவிகள் தேவகோட்டைக்கு வருகின்றனர். இந்த ரோடு பல ஆண்டாக 3.75 மீட்டர் அகலமுள்ள, குறுகிய ரோடாக உள்ளது. இதனால், ஒரே நேரத்தில் இந்த ரோட்டில் இரு வாகனங்கள் கடந்து செல்ல முடியாது.
குறுகிய ரோடாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. எனவே மாநில நெடுஞ்சாலை நிர்வாகம், இரு மாவட்டத்தை இணைக்கும் இந்த ரோட்டை இரட்டை ரோடாக அகலப்படுத்த வேண்டும் என தேவகோட்டை வட்டார மக்கள் மன்றத்தினர் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.