/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
ADDED : நவ 08, 2025 01:30 AM

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நீண்ட நாட்களாகியும் கட்டப்படாமல் உள்ளது.
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளி துவங்கப்பட்டு 1979ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படுவதால் ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்தின் போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இப்பள்ளியில் 21 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிற நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப போதிய ஆசிரியர்கள் இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பள்ளி வளாகத்திற்குள் கட்டுமான பணி நடைபெறும் போது பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதியதில் பள்ளி சுற்றுச்சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.
இதனை தற்போது வரை சரி செய்யாமல் உள்ளதால் மாணவர்கள் ஒரு வித அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

