ADDED : மார் 18, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, ஆயத்தீர்வை உதவி கமிஷனர் செல்வரங்கன், மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மாவட்ட அளவில் 389 மனுக்களுடன் வந்த மக்கள், கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.
இந்த மனு உரிய துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். இந்த முகாமில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்திற்கான பரிசு தொகையை கலெக்டர் வழங்கினார்.