ADDED : ஜூன் 13, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள களத்துார் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணை, 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், ஐந்து பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை உட்பட மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.