/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஊழியர்கள் தர்ணா இன்று காலை வரை தொடரும்
/
அரசு ஊழியர்கள் தர்ணா இன்று காலை வரை தொடரும்
ADDED : பிப் 11, 2025 05:07 AM

சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டம் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் 24 மணிநேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சைவ உணவு பரிமாறினர்.
முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை, அகவிலைப்படி, சரண் விடுப்பு விடுவித்தல் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மகளிர் அமைப்பாளர் லதா வரவேற்றார். துணை தலைவர்கள் கார்த்திக், வினோத் ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
மாநில செயலாளர் ஜெசி துவக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் தமிழரசன், மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் உமாநாத் உட்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
தொழிற்சங்க மைய தலைவர் வீரையா கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்.