/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
/
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
தேவகோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 23, 2024 04:57 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தன.
இதன் காரணமாக தேவகோட்டை டி.எஸ்பி. கவுதம் நகராட்சி நிர்வாகத்தில் பேசி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கூறினார். டி.எஸ்.பி. யும் நேரடியாக சென்று ஆக்கிரமிப்பாளரிடம் எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டி.எஸ்.பி. கவுதம், நகராட்சி கமிஷனர் தாமரை தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். ஒரு பகுதி மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்றினர். அகற்றும் பணி முடிந்து விட்டதாக கடைக்காரர்கள் கூற ஆரம்பித்தனர்.
இது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்ததில் நேற்று விடுமுறை என்பதால் அகற்றவில்லை. இன்று (திங்கட்கிழமை) அகற்றும் பணி தொடரும் என கூறினர்.
கடை வீதி மட்டுமின்றி கோவில் பகுதிகளிலும் நடக்க முடியாமல் ஆக்கிரமிப்பு உள்ளது. சிலம்பணி சன்னதி மூன்று வளைவும் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இது குறித்து ஹிந்து முன்னணி தலைவர் சுரேஷ் கூறியதாவது, எங்கள் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ஆக்கிரமிப்பு அகற்றியுள்ளனர்.
இன்னும் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில் வீதி, வெள்ளையன் ஊரணியை சுற்றி தேரோடும் வீதிகளும் ரோடுவரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
நகரின் அனைத்து பகுதியிலும் ஆக்கிரமிப்பை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்பு தொடராமல் இருக்க நகராட்சி, போலீசார் கண்காணிக்க வேண்டும், என்றார்.