UPDATED : அக் 17, 2026 02:26 PM
ADDED : அக் 17, 2026 02:24 PM
கீழடி: திருப்புவனம் வட்டாரத்தில் இந்தாண்டு நெல் சாகுபடிக்கு ஏற்ற வகையில் தக்கைப் பூண்டு சாகுபடி செய்த வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வடகிழக்கு பருவ மழையை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் 4 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. வயல்களில் மண்ணின் வளத்தை பெருக்க தக்கைப்பூண்டு சாகுபடி செய்ய வேளாண் துறை சார்பில் கடந்த மாதம் விதைகள் வழங்கப்பட்டன. கொந்தகையில் பூ பூக்கும் தருணத்தில் உள்ள செடிகளை வேளாண் துணை இயக்குநர் மதுரைச்சாமி, உதவி இயக்குனர் மலர்விழி ஆய்வு செய்தனர்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,
பூ பூக்கும் தருணத்தில் உள்ள செடிகளை மடக்கி அப்படியே உழவு செய்வதால் யூரியா மற்றும் உரங்கள் இடும் செலவு குறையும், மண் வளம் பாதுகாக்கப்படும், என்றனர்.
சலுப்பனோடை கிராமத்தில் உளுந்து விதை வயல்களையும் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.
