/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மழைக்காக நடக்கும் விழாவிற்கு மானாமதுரையில் தயாராகும் புரவி
/
மழைக்காக நடக்கும் விழாவிற்கு மானாமதுரையில் தயாராகும் புரவி
மழைக்காக நடக்கும் விழாவிற்கு மானாமதுரையில் தயாராகும் புரவி
மழைக்காக நடக்கும் விழாவிற்கு மானாமதுரையில் தயாராகும் புரவி
ADDED : ஜூலை 12, 2025 04:14 AM

மானாமதுரை : தென் மாவட்டங்களில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் நடைபெறும் புரவி எடுப்பு விழாவிற்காக மானாமதுரையில் பாரம்பரிய முறைப்படி களிமண்ணால் புரவி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் தேனி,திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை,ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட கிராமங்களில் ஆனி,ஆடியில் எல்லை மற்றும் காவல் தெய்வங்களுக்கு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், ஊர் ஒற்றுமைக்காகவும், உலக நன்மைக்காகவும் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தற்போது தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் புரவி எடுப்பு விழாவிற்காக கிராம மக்கள் மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்களிடம் புரவிகள் செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். தொழிலாளர்கள் புரவிகள், மாடுகள்,சுவாமி உருவங்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளி முருகன் கூறியதாவது: கிராமங்களில் உள்ள எல்லை மற்றும் காவல் தெய்வங்களுக்கு புரவி எடுப்பு திருவிழாக்களை கிராம மக்கள் நடத்தி வருகின்றனர்.
நாங்கள் பயபக்தியோடு விரதமிருந்து கலை நயத்தோடும், மிகுந்த தரத்தோடும் புரவிகளை தயார் செய்து வருகிறோம் என்றனர்.