/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு விழா
/
திருப்புத்துாரில் மே 3ல் புரவி எடுப்பு விழா
ADDED : மே 01, 2025 06:18 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயிலில் மே3 ல் புரவி எடுப்பு விழா நடைபெறுகிறது.
இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா திருப்புத்துார்,தம்பிபட்டி,புதுப்பட்டி கிராமத்தினரால் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு ஏப்.18ல் ராமர் மடத்தில் பிடி மண் வழங்கினர். தொடர்ந்து ஏப்.25ல் சேங்காய் எனப்படும் அய்யனார் கோயில் முன் உள்ள குளத்தில் சிவகங்கை வெட்டுதல் துவங்கியது.
மே 2ல் மூன்று கிராமத்தினரும் தம்பிபட்டிக்கு சென்று சாமி அழைத்து கொண்டு புதுப்பட்டியிலிருந்து புரவி தூக்கி வந்து புரவி பொட்டல் சேர்ப்பர். மே 3ல் புரவி பொட்டலிலிருந்து முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு புரவி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். மே 4ல் மஞ்சுவிரட்டு நடைபெறும்.